செய்திகள் மலேசியா
கோத்தா லக்சமனாவில் நம்பிக்கை கூட்டணி கொடியை 3 பேர் வீசுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது
ஜாசின்:
அதிகாலையில் நடந்த சம்பவத்தில் மலாக்கா கோத்தா லக்சமானா பிரதான சாலையின் ஓரத்தில் நிறுவப்பட்டிருந்த நம்பிக்கை கூட்டணி கொடிகள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கோத்தா லக்சமனா மாநில சட்டமன்றத்திற்கான நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் லோ சீ லியோங், சாட்சி அறிக்கைகள், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த சம்பவத்தை மூன்று பேர் நடத்தியதாக நம்பப்படுகிறது என்றார்.
அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளில் கருப்பு நிற ஆடை அணிந்த மூன்று பேர் கொடியை வெளியே இழுத்து தரையில் வீசியதைக் காட்டுகிறது.
சம்பவத்தைப் பார்த்த சாட்சிகளும் இருந்தனர். அவர்களை கண்டித்து துரத்த முயன்றனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட மூன்று பேரும் அருகிலுள்ள குடியிருப்பை நோக்கி தப்பி ஓடிவிட்டனர் என்று அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து காலை 8.39 மணிக்கு மலாக்கா தெங்கா தெங்கேரா போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2026, 7:23 pm
டத்தோஸ்ரீ சரவணன் கண்டனம்: தமிழ்மொழிப் பாட நேரத்தை கல்வியமைச்சு நிலை நிறுத்தியது
November 5, 2026, 12:31 pm
நெகிரி செம்பிலானில் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள 5,883 பணியாளர்கள், 44 ஏஜென்சிகள் தயார் நிலையில் உள்ளன
November 5, 2026, 12:14 pm
பயிற்சித் திட்டங்களை எச்ஆர்டி கோர்ப் மதிப்பாய்வு செய்கிறது: பங்குதாரர்களின் கருத்துகளை கோருகிறது
November 5, 2026, 11:56 am
மலேசியாவில் 61 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது
November 5, 2026, 10:41 am
