செய்திகள் மலேசியா
நஜிப் இன்று 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துகிறார்?
கோலாலம்பூர்:
டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிப்பதற்காக 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமரின் பிரதிநிதி, இன்று இங்குள்ள கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் இந்த அபராதத்தைச் செலுத்துவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி முன்னாள் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் இருந்து நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பைப் பெற்றார்.
இது, அவர் தனது தண்டனையின் மீதமுள்ள காலத்தை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும்.
73 வயதான நஜிப், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளில், கடந்த 2020 ஜூலை 28ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2026, 1:37 pm
அரிவாளால் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவ பெண் கைது
November 4, 2026, 11:06 am
தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ மூடா, புக்கிட் கமுனிங் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள்
November 4, 2026, 11:03 am
220 மில்லியன் ரிங்கிட் பெட்ரோலிய சரக்கு விவகாரம்; எம்ஏசிசி மறுஆய்வு செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
November 4, 2026, 10:30 am
7 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியர் மீது விசாரணை: 6 நாட்கள் தடுப்புக் காவல்
November 4, 2026, 10:24 am
ஷாஆலமில் திடீர் வெள்ளம்: பிரதான சாலைகள் மூடப்பட்டன, கடுமையான போக்குவரத்து நெரிசல்
November 4, 2026, 8:43 am
