நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாஆலமில் திடீர் வெள்ளம்: பிரதான சாலைகள் மூடப்பட்டன, கடுமையான போக்குவரத்து நெரிசல்

ஷாஆலம்:

இன்று அதிகாலை ஷா ஆலம் பகுதியைச் சுற்றி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், மக்கள் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பிரதான சாலைகள் மூடப்பட்டு, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

என்கேவிஇ, எலிட், கெத்ரி, செகஷன் 13, புக்கிட் ஜெலுடோங் அருகே உள்ள பல சாலைகள் பாதிக்கப்பட்ட இடங்களில் அடங்கும்.

'த்ரெட்ஸ்' என்ற சமூக ஊடகப் பயனர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலமான ஒரு கணக்கெடுப்பில், பல வழித்தடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதும், சில சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதும் தெரியவந்தது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிக்கு அருகிலுள்ள மேம்பாலச் சாலையில் வாகனங்கள் வரிசையாக மெதுவாக நகர்வதை அந்தக் காட்சிகள் காட்டின.

அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டிருந்ததால், அலுவலகத்திற்குச் செல்வதற்கான வழியைத் தேடுவதில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செலவழித்ததாக அந்தப் பயனர் ஒருவர் கூறியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset