நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காடேக் தொகுதியின் உண்மையான பலம் அதன் மக்களே: நடராஜா செல்லப்பா

மலாக்கா:

காடேக் தொகுதியின் உண்மையான பலம் அதன் மக்களே என்று  தேசிய முன்னணி சார்பில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நடராஜா செல்லப்பா கூறினார்.

அவர் காலை உணவு நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.

கம்போங் பெகோ, தாமான் புக்கிட் தம்பின், தாமான் ரக்யாட் கோலா ஈனா ஆகிய பகுதிகளுக்குச் சென்ற அவர், அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துகள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கேட்டறிந்தார்.
காடேக் தொகுதியின் உண்மையான பலம் அதன் மக்களே.

ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பளித்து அவர்களின் குரலை உரிய இடத்திற்குக் கொண்டு செல்வதே தனது நோக்கம் என்றும் நடராஜா செல்லப்பா தெரிவித்தார்.

மேலும், தமது வருகையை அன்புடன் வரவேற்ற உள்ளூர் தலைவர்கள், பொதுமக்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

காடேக் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் 4ஆம் எண் வேட்பாளராக நடராஜா செல்லப்பா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset