செய்திகள் மலேசியா
சுங்கை பூலோ வெள்ளப் பாதிப்பைக் குறைக்க 12 மில்லியன் ரிங்கிட் செலவில் தற்காலிக நீர்த்தேக்கக் குளம்: டத்தோஸ்ரீ ரமணன்
சுங்கை பூலோ:
சுங்கை பூலோ பகுதியில் அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், 12 மில்லியன் ரிங்கிட் செலவில் தற்காலிக நீர்த்தேக்கக் குளம் அமைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், சுங்கை பூலோ- சுங்கை டாமான்சாரா வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் முழுமையடையும் வரை, இந்தத் தற்காலிக நீர்த்தேக்கக் குளம் குறுகிய கால வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாகச் செயல்படும்.
அப்பகுதியில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்த உத்தரவின் அடிப்படையில், உடனடித் தீர்வுகளைக் கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 700 மில்லியன் ரிங்கிட் கூட்டரசு நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட இரு வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், 2029ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டங்களின் முதல், இரண்டாம் கட்டப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட பணிகளின் அடிப்படையில், திட்டங்களின் முன்னேற்றம் 30 முதல் 60 விழுக்காடு வரை உள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் அப்பகுதியில் நான்காவது முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 550 வீடுகளும் 1,000க்கும் மேற்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளநீர் விரைவாக உயர்ந்து பின்னர் வடிந்தாலும், பொதுமக்களின் வீட்டு உபயோகப் பொருட்கள், உடைமைகள் சேதமடைவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய பாதிப்புகளைக் குறைப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றார்.
பாதிக்கப்பட்ட வீடுகளில் தூய்மைப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதுடன், சமூக நலத்துறையின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அவசரகால உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2026, 1:37 pm
அரிவாளால் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவ பெண் கைது
November 4, 2026, 11:06 am
தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ மூடா, புக்கிட் கமுனிங் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள்
November 4, 2026, 11:03 am
220 மில்லியன் ரிங்கிட் பெட்ரோலிய சரக்கு விவகாரம்; எம்ஏசிசி மறுஆய்வு செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
November 4, 2026, 10:30 am
7 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியர் மீது விசாரணை: 6 நாட்கள் தடுப்புக் காவல்
November 4, 2026, 10:28 am
நஜிப் இன்று 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துகிறார்?
November 4, 2026, 10:24 am
ஷாஆலமில் திடீர் வெள்ளம்: பிரதான சாலைகள் மூடப்பட்டன, கடுமையான போக்குவரத்து நெரிசல்
November 4, 2026, 8:43 am
