நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்த ஆண்டு 80,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டன

கோலாலம்பூர்:

பொதுமக்களிடமிருந்து ஆயிரக்கணக்கான தொல்லைப் புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு முழுவதும் நாடு தழுவிய அளவில் ஊராட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட 24,195 நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 80,412 தெருநாய்கள் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டன.

அதே காலகட்டத்தில் தெருநாய்கள் தொடர்பான 45,804 புகார்களைத் தனது அமைச்சு பதிவு செய்ததைத் தொடர்ந்து, இந்த பெரிய அளவிலான அமலாக்க நடவடிக்கை செயல்படுத்தப்பட்டதாக வீட்டுவசதி, ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.

பிடிபட்ட மொத்த விலங்குகளில், 22,228 நாய்கள்  கால்நடை சேவைகள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவற்றின் உரிமையாளர்களால் திரும்பப் பெறப்பட்டன அல்லது வளர்ப்பு நாய் திட்டத்தின் மூலம் செல்லப் பிராணிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன என்று அவர் கூறினார்.

பொதுமக்களின் புகார்கள், அடையாளம் காணப்பட்ட முக்கிய இடங்களின் அடிப்படையில் தெருநாய்களைப் பிடிப்பதற்கான வழக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், குறிப்பாக அபாயப் பகுதிகளில், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊராட்சி அமைப்புகள் ஊக்குவிக்கப்படுவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset