செய்திகள் மலேசியா
உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு மனிதவள அமைச்சு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறது: டத்தோஶ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் அந்நியத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இணங்க, மனிதவள அமைச்சகம் வேலை சந்தையில் மலேசியர்களுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.
மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
MyFutureJobs இணையதளம் மூலம் உள்ளூர் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு முதலாளிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அதே நேரத்தில்அந்நியத் தொழிலாளர்களின் தேவையை கவனமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
இதற்கிடையில், ஜூன் 2027 முதல் மாதத்திற்கு 2 ,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் குறைந்தபட்ச ஊதியம் நான்கு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும்.
50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான விற்பனை வருவாய் கொண்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஊதிய உயர்வுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள நாம் அவகாசம் கொடுக்க வேண்டும்.
மக்களவையில் நேற்று தனது அமைச்சின் கொள்கை நிலைக்கான வழங்கல் மசோதா 2027 மீதான விவாதத்தை முடித்து வைக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.
அரசாங்கம் குறிப்பிட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் குழுவிற்கு, அவர்களின் வணிகத் திறனைக் கருத்தில் கொண்டும், தொழிலாளர்கள் தங்களின் திறன், தகுதிகளுக்கு ஏற்ற ஊதியத்தைப் பெறுவதை உறுதி செய்து கொண்டும், ஊதிய உயர்வை கட்டம் கட்டமாக செயல்படுத்தும்.
உள்ளூர், அந்நியத் தொழிலாளர்களிடையே குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை வேறுபடுத்தும் முன்மொழிவு குறித்துப் பேசிய அவர், இந்த விவகாரத்திற்கு, குறிப்பாக உள்நாட்டு சட்டரீதியான தாக்கங்கள் மற்றும் சர்வதேச மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு முழுமையான ஆய்வு தேவை என்று கூறினார்.
அதே நேரத்தில் அந்நியத் தொழிலாளர்களின் ஆட்சேர்ப்பு தற்போது ஆறு முக்கியத் துறைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட துணைத் துறைகளுக்கு மட்டுமே, கடுமையான அளவுகோல்கள் மற்றும் ஒப்புதல் நிபந்தனைகளுடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்காலிகப் பணிப் பொருளாதாரத் துறை குறித்துப் பேசிய டத்தோஶ்ரீ ரமணன், இந்தத் தொழிலாளர்களுக்கான வருமானக் கணக்கீட்டு முறை மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளை அரசாங்கம் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வெளிப்படையாகவும், சமமாகவும், கண்ணியமாகவும் இறுதி செய்யும் என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 11:27 am
பெட்ரோனாஸ் 152.4 பில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்டியுள்ளது: அஸாலினா
October 30, 2026, 11:26 am
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 முதல் 11 பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன: அர்மிசான்
October 30, 2026, 10:32 am
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: ஓய்வுபெற்ற சுகாதார அமைச்சு ஊழியர் பலி
October 30, 2026, 10:16 am
ரயில் நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு போக்குவரத்து அமைச்சுக்கு பிரதமர் உத்தரவு
October 30, 2026, 10:15 am
2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பருவத்திற்கு ஒவ்வாத புகைமூட்டப் பிரச்சினையை மலேசியா எதிர்கொள்ளும்
October 29, 2026, 11:23 pm
