செய்திகள் மலேசியா
பெட்ரோனாஸ் 152.4 பில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்டியுள்ளது: அஸாலினா
கோலாலம்பூர்:
அதிகரித்த உள்நாட்டு உற்பத்தி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் விற்பனை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, பெட்ரோனாஸ் 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 152.4 பில்லியன் ரிங்கிட் வருவாயைப் பதிவு செய்துள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட புவிசார் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, முக்கியப் பொருட்களின் சராசரி விற்பனை விலை அதிகரித்ததன் மூலம் பதப்படுத்தப்பட்ட எரிவாயுவின் விற்பனையும் இந்த வருவாய்க்கு ஒரு காரணமாக அமைந்தது என்று பிரதமர் துறையின் சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம் அமைச்சர் டத்தோஶ்ரீ அஸலினா ஓத்மான் சைட் கூறினார்.
இருப்பினும், வலுவான சந்தை விலைகளின் ஆதரவு இருந்தபோதிலும், நிலையான செயல்பாடுகளைப் பராமரிப்பதற்கும், நாட்டின் எரிசக்தி விநியோகத்தின் பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் பெட்ரோனாஸ் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு இணங்க, கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கும் பதப்படுத்துவதற்குமான செலவு அதிகரித்ததன் காரணமாக, அதிக விற்பனைச் செலவுகளாலும் பெட்ரோனாஸ் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பெட்ரோனாஸ், அனைவரையும் உள்ளடக்கிய, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், நிலையான வளர்ச்சித் திட்டத்திற்கு இணக்கமான முன்முயற்சிகள் மூலம் பெருநிறுவன சமூகப் பொறுப்பைச் செயல்படுத்துகிறது.
இதன் மூலம் உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்குப் பங்களிக்கிறது.
மேலும், 2020க்கும் கடந்த ஆண்டுக்கும் இடையில், நாட்டில் பல்வேறு பின்னணிகள், தேவைகளைக் கொண்ட பயனாளிகளுக்குப் பயனளிக்கும் 1,000-க்கும் மேற்பட்ட முன்முயற்சிகளை பெட்ரோனாஸ் செயல்படுத்தியுள்ளது என்று அவர் இன்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 11:26 am
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 முதல் 11 பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன: அர்மிசான்
October 30, 2026, 11:25 am
உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு மனிதவள அமைச்சு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறது: டத்தோஶ்ரீ ரமணன்
October 30, 2026, 10:32 am
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: ஓய்வுபெற்ற சுகாதார அமைச்சு ஊழியர் பலி
October 30, 2026, 10:16 am
ரயில் நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு போக்குவரத்து அமைச்சுக்கு பிரதமர் உத்தரவு
October 30, 2026, 10:15 am
2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பருவத்திற்கு ஒவ்வாத புகைமூட்டப் பிரச்சினையை மலேசியா எதிர்கொள்ளும்
October 29, 2026, 11:23 pm
