நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: ஓய்வுபெற்ற சுகாதார அமைச்சு ஊழியர் பலி

ரெம்பாவ்:
வெள்ளம் சூழ்ந்த சாலையைக் கடக்க முயன்றபோது, பெருக்கெடுத்த வெள்ளநீரில் பெரோடுவா மைவி  கார் அடித்துச் செல்லப்பட்டதில், 74 வயதுடைய சுகாதார அமைச்சின்  ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்றிரவு சுமார் 9.20 மணியளவில், கம்போங் குண்டூர் உலு ஆற்றுக்கு அருகிலுள்ள கால்வாயை ஒட்டிய சாலையில் நிகழ்ந்தது.

வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட காருக்குள் சிக்கிய நிலையில், பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நெகிரி செம்பிலான் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் தெரிவிக்கையில், சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ரெம்பாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் குழுவினர் இரவு 9.22 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

“வெள்ளநீர் பெருக்கெடுத்துச் சென்ற சாலையைக் கடக்க முயன்றபோது, தனது தந்தை பெரோடுவா மைவி காருக்குள் சிக்கிக்கொண்டதாக உயிரிழந்தவரின் உறவினர் தகவல் வழங்கினார்.

“இதையடுத்து, மீட்புப் பணியில் ரெம்பாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்களுடன், தெலுக் கெமாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நீர் மீட்புப் பிரிவினரும் இணைந்தனர்.

“அவர்கள் காருக்குள் சிக்கியிருந்தவரை வெற்றிகரமாக மீட்டனர்,” என்று அவர் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset