செய்திகள் மலேசியா
மலேசிய இந்தியர்களுக்காக தொடர்ந்து ம.இ.கா குரல் கொடுக்கும்: ம.இ.கா கூட்டரசு பிரதேச செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் தகவல்
கோலாலம்பூர்:
மலேசிய இந்தியர்களின் உரிமைக்காகவும் உணர்வுக்காகவும் ம.இ.கா தொடர்ந்து குரல் கொடுத்து வரும் என்றும் மலேசிய இந்தியர்களின் நல்வாழ்வுக்கு ம.இ.கா தொடர்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூட்டரசு பிரதேச ம.இ.கா செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் கூறினார்.
கூட்டரசு பிரதேசத்தில் உள்ள நான்கு தொகுதிகளை உட்படுத்தி இந்தியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள், அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்
ம.இ.கா அரசாங்கத்தில் இருக்கிறதோ இல்லையோ நாம் தொடர்ந்து மலேசிய இந்தியர்களுக்கான பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்
ம.இ.காவின் இரு தூண்களாக உள்ள தேசிய தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் ஆகிய இருவரின் வழிகாட்டுதல் பேரில் தீபத்திருநாளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது
இந்திய சமுதாயத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் முன்னெடுப்படுத்தில் ம.இ.கா என்றும் முன்னிலை வகிப்பதாக கம்போங் பாடாங் தெம்பாக் ம.இ.கா தொகுதி தலைருமான அவர் நம்பிக்கை ஊடகத்திடம் தெரிவித்தார்
முன்னதாக, ஶ்ரீ செமாராக்கில் உள்ள பி40 இந்திய குடும்பங்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஹரேகிருஷ்ணா பட்டுமாளிகையின் உரிமையாளர் திரு. ஹரேகிருஷ்ணா அவர்களும் கலந்து கொண்டு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 11:27 am
பெட்ரோனாஸ் 152.4 பில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்டியுள்ளது: அஸாலினா
October 30, 2026, 11:26 am
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 முதல் 11 பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன: அர்மிசான்
October 30, 2026, 11:25 am
உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு மனிதவள அமைச்சு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறது: டத்தோஶ்ரீ ரமணன்
October 30, 2026, 10:32 am
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: ஓய்வுபெற்ற சுகாதார அமைச்சு ஊழியர் பலி
October 30, 2026, 10:16 am
ரயில் நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு போக்குவரத்து அமைச்சுக்கு பிரதமர் உத்தரவு
October 30, 2026, 10:15 am
2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பருவத்திற்கு ஒவ்வாத புகைமூட்டப் பிரச்சினையை மலேசியா எதிர்கொள்ளும்
October 29, 2026, 11:23 pm
