நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரயில் நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு போக்குவரத்து அமைச்சுக்கு பிரதமர் உத்தரவு

கோலாலம்பூர்:

மக்களின் அன்றாட வழக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் என அஞ்சப்படும் ரயில் சேவை நெரிசல் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்குமாறு போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்கிற்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று இரவு, த்ரெட்ஸ் பிளாட்பார்மில் உள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் சூழ்நிலையைத் தொடர்ந்து, siti.anisahj என்ற நபர் அளித்த புகாருக்குப் பதிலளிக்கும் விதமாகப் பிரதமர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு உடனடியாகத் தீர்வு காணுமாறு ரேபிட் கே.எல் நிறுவனத்திற்கும்  அவர் உத்தரவிட்டுள்ளார்.

ரயில் சேவை நெரிசல் பிரச்சினை அடிக்கடி நிகழ்கிறது. மேலும் இது நிச்சயமாக மக்களின் அன்றாட வழக்கத்தை மிகவும் பாதிக்கிறது.

அரசாங்கம் அதிக உணர்வுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பிரதமரின் பதில், 25,000க்கும் மேற்பட்ட லைக்குகள், கிட்டத்தட்ட 300 கமெண்டுகள் மற்றும் சுமார் 1,500 ரீட்வீட்டுகளைப் பெற்றதுடன், பெரும் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset