செய்திகள் மலேசியா
பொதுப் பணம் விரயம்; நிதிக் குற்றங்களை விசாரிக்க புதிய சிறப்புப் பணிக்குழு அமைப்பதற்கான காரணங்களை ரபிசி கேள்விக்குள்ளாக்குகிறார்
கோலாலம்பூர்:
பெருநிறுவன மாஃபியா ஊழல் தொடர்ந்து வெளிச்சத்தில் இருக்கும் நிலையில், நிதிக்குற்றங்களை விசாரிக்க மற்றொரு சிறப்புப் பணிக்குழுவை அமைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தை ரபிசி ரம்லி கேள்விக்குறியாக்கியுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஊழல் வெளிவந்ததிலிருந்து பல விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை மூடிமறைப்பதையும் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சமீபத்திய விசாரணை நடத்தப்படுகிறதா என்றும் பெர்சாமா கட்சித் தலைவருமான அவர் கேள்வி எழுப்பினார்.
நிதிக்குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட புதிய சிறப்புக் குழுவின் தலைவராக சட்டத்துறை தலைவராக டுசுகி மொக்தார் நியமிக்கப்பட்டது பல கேள்விகளை எழுப்புவதாகக் கூறினார்.
அவற்றில், விசாரணையின் நிலை மற்றும் இந்த ஊழல் தொடர்பான முந்தைய அறிக்கைகள், குறிப்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்னாள் எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாகியின் பங்குதாரர்கள் குறித்த அறிக்கை ஆகியவை அடங்கும்.
பெருநிறுவன மாஃபியா ஊழலை மட்டும் அல்லாமல், அனைத்து நிதிக்குற்றங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தக் குழுவின் வரம்பு விரிவுபடுத்தப்படுமா?
ஏற்கனவே பல்வேறு அறிக்கைகளும் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த விசாரணையை மீண்டும் தொடங்கினால் எவ்வளவு பொதுப் பணம் வீணாகும்?
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பிரதமர் அளித்த பதிலில் சுட்டிக்காட்டப்பட்டபடி அனைத்து நிதிக்குற்றங்களையும் உள்ளடக்கும் வகையில் இதன் வரம்பு விரிவுபடுத்தப்பட்டால், இது பெருநிறுவன மாஃபியாவின் உண்மையான பிரச்சினையை மூடிமறைத்து, அதை நிதிக்குற்ற விசாரணைகளுக்குத் திசைதிருப்பும் ஒரு முயற்சியாக இருக்குமா? என்று அவர் கேட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 11:25 am
உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு மனிதவள அமைச்சு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறது: டத்தோஶ்ரீ ரமணன்
October 30, 2026, 10:32 am
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: ஓய்வுபெற்ற சுகாதார அமைச்சு ஊழியர் பலி
October 30, 2026, 10:16 am
ரயில் நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு போக்குவரத்து அமைச்சுக்கு பிரதமர் உத்தரவு
October 30, 2026, 10:15 am
2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பருவத்திற்கு ஒவ்வாத புகைமூட்டப் பிரச்சினையை மலேசியா எதிர்கொள்ளும்
October 29, 2026, 11:23 pm
மலாக்காவில் 8 இடங்களில் பெர்சத்து போட்டியிடுகிறது: அஸ்மின்
October 29, 2026, 11:12 pm
வாழ்க்கைச் செலவினங்கள் சுமையாக இருக்கும் வரை ஜிஎஸ்டி பரிசீலிக்கப்படாது: அமீர் ஹம்சா
October 29, 2026, 11:10 pm
