செய்திகள் மலேசியா
சாலைப் பராமரிப்புப் பணியாளரின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை குடிபோதையில் இருந்த விமானப் பணியாளர் மறுத்தார்
கோலாலம்பூர்:
சாலைப் பராமரிப்புப் பணியாளரின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை குடிபோதையில் இருந்த விமான பணியாளர் மறுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று, மதுபோதையில் வாகனம் ஓட்டி, ஒரு சாலை பராமரிப்புப் பணியாளரைக் காயப்படுத்தி, சக பணியாளரான பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்குக் காரணமான இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என மனு தாக்கல் செய்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரான 26 வயதான முகமது இமான் நபீஸ் ஃபாங், மாஜிஸ்திரேட் அதிகா முகமது சயிம் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட உடனேயே தன்னை விசாரிக்க வேண்டும் என்று கோரினார்.
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அந்த நபரின் இரத்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி மது இருந்த நிலையில், அவர் ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டி, 29 வயதான ஃபாரிஸ் இர்பான் ஃபஸ்லியின் மரணத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி அதிகாலை 4.09 மணிக்கு, இங்குள்ள ஜாலான் பார்லிமென் நோக்கிச் செல்லும் சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் இந்தக் குற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
- நாகராஜன் பார்த்திபன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2026, 4:07 pm
தீபாவளியை முன்னிட்டு 11,888 கூடுதல் இருக்கைகள்: கேடிஎம்பி அறிவிப்பு
October 26, 2026, 2:43 pm
எஸ்பிஎம் தேர்வின் போது உள்ளாடைக்குள் ஐபோனை மறைத்த வழக்கில் முன்னாள் மாணவரின் மேல்முறையீடு தோல்வியடைந்தது
October 26, 2026, 12:41 pm
ரவாங்கில் பால்கனியிலிருந்து விழுந்து பதின்ம வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை
October 26, 2026, 12:33 pm
அக்மாலின் மனுவை பினாங்கு அரசு வழக்கறிஞர் நிராகரித்தார்
October 26, 2026, 12:03 pm
86 கடைகளுடன் ஈப்போ லிட்டில் இந்தியாவில் களை கட்டியது தீபாவளி சந்தை
October 26, 2026, 11:41 am
KLIA குடியிருப்பு கொலை: AKPS அதிகாரியான மனைவியைக் கொன்றதாக நபர் மீது குற்றச்சாட்டு
October 26, 2026, 11:22 am
