செய்திகள் மலேசியா
86 கடைகளுடன் ஈப்போ லிட்டில் இந்தியாவில் களை கட்டியது தீபாவளி சந்தை
ஈப்போ:
கிட்டத்தட்ட 86 கடைகளுடன் ஈப்போ லிட்டில் இந்தியாவில் தீபாவளி சந்தை களை கட்டியுள்ளது.
ஈப்போ லிட்டில் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜீவ கிருஷ்ணன் இதனை கூறினார்.
ஈப்போ இந்திய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில், இவ்வாண்டுக்கான தீபாவளிச் சந்தை அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இவ்வாண்டு தீபாவளிச் சந்தையில் சுமார் 86 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமான வர்த்தகர்களும் இச்சந்தையில் பங்கேற்று வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இவ்வாண்டு தீபாவளிச் சந்தையைச் சிறப்பாக நடத்துவதற்காகப் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, வாகன நிறுத்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், வர்த்தக சங்கத்தின் பின்புறத்தில் சுமார் 200 முதல் 300 கார்கள் வரை நிறுத்தக்கூடிய தனியார் வாகன நிறுத்துமிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் சந்தைக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களைச் சிரமமின்றி நிறுத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அதேபோல் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு அமைச்சர் வோங் கா வோ மூலமாகப் புதிய கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே, இவ்வாண்டு தீபாவளிச் சந்தைக்கு வருகை தந்து, அங்குள்ள வர்த்தகர்களுக்கு ஆதரவு அளிப்பதுடன், தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுமாறு அனைத்து தமிழ் மக்களையும் அவர் அன்புடன் கேட்டு கொண்டார்.
நேற்றிரவு ஈப்போ லிட்டில் இந்தியா வர்த்தை சங்க பொறுப்பாளர்களை சந்தித்ததுடன் அங்கு நிறுவப்பட்ட நவீன கழிவரையை திறந்து வைத்துடன் ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கத்திற்கு 20 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2026, 12:41 pm
ரவாங்கில் பால்கனியிலிருந்து விழுந்து பதின்ம வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை
October 26, 2026, 12:33 pm
அக்மாலின் மனுவை பினாங்கு அரசு வழக்கறிஞர் நிராகரித்தார்
October 26, 2026, 11:41 am
KLIA குடியிருப்பு கொலை: AKPS அதிகாரியான மனைவியைக் கொன்றதாக நபர் மீது குற்றச்சாட்டு
October 26, 2026, 11:22 am
குற்றச் செயல்களுக்காக வழிபாட்டுத் தலங்களைத் தவறாகப் பயன்படுத்தும் விவகாரத்தில் சமரசமில்லை: பாப்பாராயுடு
October 26, 2026, 10:50 am
பெர்சத்து மீது தேசியக் கூட்டணி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது: தக்கியூடின்
October 26, 2026, 10:28 am
13ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சரவா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டது
October 26, 2026, 10:25 am
