நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அக்மாலின் மனுவை பினாங்கு அரசு வழக்கறிஞர் நிராகரித்தார்

புக்கிட் மெர்தாஜாம்:

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த வழக்கில், டிசம்பர் 2025-ல் தன் மீதான குற்றச்சாட்டைத் திரும்பப் பெறுமாறு அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலே சமர்ப்பித்த மனுவை, பினாங்கு மாநில அரசுத் தரப்பு வழக்கறிஞர் நிராகரித்தார்.

அதே ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று முகநூலில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளியில் உள்ள குற்றச்சாட்டின் பேரில் 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அக்மால் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

அவர் குற்றத்தை மறுத்து வாதிட்டார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(பி)-ன் கீழ் உள்ள இந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வைரலான காணொளி ஒன்றில், வன்பொருள் கடை உரிமையாளர் ஒருவர் தேசியக் கொடியை தலைகீழாகப் பிடித்திருந்ததைக் குறித்த சர்ச்சையுடன் இந்தக் காணொளி தொடர்புடையது.

அவரது தலைமை வழக்கறிஞர், ஐசாத் அஸாம், இந்த வழக்கு தொடர்பான உண்மைகள், பார்வைகள்ழ் சட்டரீதியான கருத்துக்களை முன்வைப்பதற்காக, தலைமை வழக்கறிஞரிடம் இரண்டாவது மனுவைச் சமர்ப்பிக்க புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset