நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

KLIA குடியிருப்பு கொலை: AKPS அதிகாரியான மனைவியைக் கொன்றதாக நபர் மீது குற்றச்சாட்டு

சிரம்பான்:

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய (KLIA) குடியிருப்பில், அக்டோபர் 15 அன்று, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் (AKPS) அதிகாரியான தனது மனைவியைக் கொலை செய்ததாக, இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

37 வயதான முஹம்மது கைருதீன் சஃபி'ஐ, மாஜிஸ்திரேட் நூருல் சகினா ரோஸ்லி முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டைப் புரிந்துகொண்டதை உணர்த்தும் வகையில் தலையசைத்தார்.

இருப்பினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

அக்டோபர் 15 அன்று இரவு சுமார் 7 மணியளவில், நிலாய் பகுதியில் உள்ள கே.எல்.ஐ.ஏ அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில், 35 வயதான நோர்ஹஸ்வானி இப்ராஹிமை கொலை செய்ததாக முகமது கைருதீன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு, தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப் பிரிவின் கீழ், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் வழங்கப்படும்.

துணை அரசு வழக்கறிஞர் ஃபரா வஹிதா முஹம்மது ஷெரீப் இந்த வழக்கை நடத்தினார். அதே சமயம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கறிஞர் யாரும் இல்லை.

வழக்கு விசாரணைக்காக டிசம்பர் 22-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset