நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளியை முன்னிட்டு 11,888 கூடுதல் இருக்கைகள்: கேடிஎம்பி அறிவிப்பு

கோலாலம்பூர்:

தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 5 முதல் 9 வரை மின்சார ரயில் (ETS), EMUPlus சேவைகளில் 11,888 கூடுதல் இருக்கைகளை கேடிஎம்பி வழங்குகிறது.

வரும் நவம்பர் 5 முதல் 9 வரையிலான காலகட்டத்திற்கு, பாடாங் பெசார்-கேஎல் சென்ட்ரல்-பாடாங் பெசார் வழித்தடத்திற்கு கேடிஎம்பி தினமும் இரண்டு கூடுதல் ஈடிஎஸ் சேவைகளை வழங்கும்.

மேலும், நவம்பர் 6 முதல் 9 வரை ஜேபி சென்ட்ரல்-கேஎல் சென்ட்ரல்-ஜேபி சென்ட்ரல் வழித்தடத்திற்கு தினமும் நான்கு கூடுதல் ஈடிஎஸ் சேவைகளும் வழங்கப்படும்.

ஜேபி சென்ட்ரல்-கேஎல் சென்ட்ரல்-ஜேபி சென்ட்ரல் வழித்தடத்திற்கு, 2026 நவம்பர் 6 முதல் 9 வரை தினமும் நான்கு ஈடிஎஸ் சேவைகள் மூலம் கேடிஎம்பி 5,056 கூடுதல் இருக்கைகளை வழங்கும்.

பாடாங் பெசார்-கேஎல் சென்ட்ரல்-பாடாங் பெசார் வழித்தடத்திற்கு, வணிக வகுப்புப் பெட்டி வசதிகள் உட்பட, இயக்கப்படும் ஐந்து நாட்கள் முழுவதும் 3,160 கூடுதல் இருக்கைகள் வழங்கப்படும்.

இந்த வழித்தடத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை அக்டோபர் 27 மதியம் 12 மணி முதல் தொடங்கும்

அதே சமயம் ஜேபி சென்ட்ரல்-கேஎல் சென்ட்ரல்-ஜேபி சென்ட்ரல் வழித்தடத்திற்கான டிக்கெட்டுகள் 7ஆம் தேதி முதல் விற்பனையில் உள்ளன. 

நவம்பர் 5 முதல் 9 வரையிலான குறிப்பிட்ட தேதிகளில், பண்டார் தாசேக் செலத்தான்-ஈப்போ-கிள்ளான் வழித்தடத்திற்கும், அதன் மறு வழித்தடத்திற்கும், கேடிஎம்பி நிறுவனம் EMUPlus சேவை மூலம் 3,672 இருக்கைகளை வழங்கும்.

இந்த சேவைக்கான டிக்கெட் விற்பனை நாளை மதியம் 12 மணி முதல் தொடங்கும்.

குறிப்பாக, பயணத் தேவை அதிகரிக்கும் பண்டிகைக் காலங்களில், இரயில் போக்குவரத்துத் திறனை அதிகரிப்பதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது என்று கேடிஎம்பி கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset