நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளியை முன்னிட்டு 2019 முதல் 2026 வரை அறப்பணியில் தொடர்ந்து ஈடுபடும் ஜொகூர் ஒற்றுமை கரங்கள் இயக்கம்: சிவா

ஜொகூர்பாரு:

ஜொகூரை தளமாகக் கொண்டு செயல்படும் ஒற்றுமை கரங்கள் எனும் Persatuan Kebajikan Keprihatinan Rakyat Bersatu Johor Bahru அமைப்பு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் தீபாவளி அறப்பணித் திட்டத்தின் மூலம் ஏழ்மை, ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவி வழங்கி வருகிறது.

அமைப்பின் தலைவர் சிவா ஃபுரோன்ஸ் ஜேம்ஸ் இதனை கூறினார்.

ஆலோசகர்களான ஸ்டீவன் பட்டினாதன்,  செல்லதுரை ஜேம்ஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீபாவளிப் பண்டிகையை ஏழை, எளிய குடும்பங்களும் மகிழ்ச்சியுடனும் கண்ணியத்துடனும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், இவ்வமைப்பு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 300 ரிங்கிட் மதிப்பிலான உதவிப் பொருட்களும் பண்டிகைச் செலவுகளுக்கு உதவும் வகையில் 100 ரிங்கிட் ரொக்க உதவியும் வழங்கப்பட்டது.

மேலும், பொருளாதார நெருக்கடியில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்குக் கல்விக் கட்டண உதவி, பள்ளிக்குச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவு உதவிகளும் வழங்கப்படுகிறது.

மேலும் முதியவர்களுக்கான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

இந்த அறப்பணிகளில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இத்திட்டங்கள் அரசாங்க நிதியுதவியின்றி, அமைப்பின் உறுப்பினர்களின் சொந்த நிதிப் பங்களிப்புகள் மூலமாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

ஒற்றுமை, மனிதநேயம், தாராள மனப்பான்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, உதவி தேவைப்படும் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதே அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

ஒவ்வொரு தனிநபரும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், ‘ஒற்றுமை கரங்கள்’ அமைப்பு தனது சமூக சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset