நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

"முதலில் நாம் வெற்றி பெறுவோம்; அதன்பிறகு பேசுவோம்": மலாக்கா தேர்தலில் கவனம் செலுத்துமாறு தேசிய முன்னணி கட்சிகளுக்கு ஜம்ரி அறிவுறுத்தல்

லுமுட்:

தேசிய முன்னணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும், தொகுதிப் பங்கீட்டு வேறுபாடுகள் குறித்த கருத்து வேறுபாடுகளில் கவனம் செலுத்துவதை விடுத்து,  மலாக்கா மாநிலத் தேர்தலில் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் கூறினார்.

எட்டப்பட்ட ஒருமித்த கருத்தின்படி, தேசிய முன்னணிக்கு ஒதுக்கப்பட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதில் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"நாங்கள் கலந்துரையாடல் மனப்பான்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். வெவ்வேறு கட்சிகள் தங்களது சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருப்பது இயல்பானது.

"எடுக்கப்படும் முடிவுகளைப் பொருட்படுத்தாமல், தேசிய முன்னணி போட்டியிடும் 21 இடங்களை வெல்வதிலேயே முக்கிய கவனம் இருக்க வேண்டும்," என்று நேற்று பாங்கோர் தீவில் உள்ள மன்ஜங் சமூகக் கல்லூரியில் வாழ்நாள் கற்றல் சிறப்பு மையத்தை (PSH Excellence) திறந்து வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset