செய்திகள் மலேசியா
பெர்சத்து மீது தேசியக் கூட்டணி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது: தக்கியூடின்
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் கூட்டணிக்கு எதிராகப் போட்டியிட்டது உட்பட, கூட்டணியின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டதற்காக, தேசியக் கூட்டணி பெர்சத்து மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.
தேசியக் கூட்டணி தலைவர் சம்சுரி மொக்தார் தலைமையில் நடைபெற்ற உச்ச மன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் தக்கியூடின் ஹசான் கூறினார்.
கூட்டணியின் அரசியலமைப்பின் 15ஆவது பிரிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தேசியக் கூட்டணி ஒழுங்கு நடவடிக்கையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.
மேலும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பெர்சத்து கட்சிக்கு வரைவு செய்யப்படும்.
குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க அவர்களுக்கு நிச்சயமாகப் போதுமான அவகாசம் வழங்கப்படும் என்று, பெர்சத்து கலந்துகொள்ளாத அந்தக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2026, 12:03 pm
86 கடைகளுடன் ஈப்போ லிட்டில் இந்தியாவில் களை கட்டியது தீபாவளி சந்தை
October 26, 2026, 11:41 am
KLIA குடியிருப்பு கொலை: AKPS அதிகாரியான மனைவியைக் கொன்றதாக நபர் மீது குற்றச்சாட்டு
October 26, 2026, 11:22 am
குற்றச் செயல்களுக்காக வழிபாட்டுத் தலங்களைத் தவறாகப் பயன்படுத்தும் விவகாரத்தில் சமரசமில்லை: பாப்பாராயுடு
October 26, 2026, 10:28 am
13ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சரவா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டது
October 26, 2026, 10:25 am
காசே ஹவானா நிதி திட்டத்தின் மூலம் 886 ஊடகவியலாளர்கள் பயனடைந்துள்ளனர்: தியோ நீ சிங்
October 26, 2026, 6:44 am
புத்ராஜெயாவில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை இழக்கும்: டத்தோ ஸ்ரீ முஹம்மது சனுசி
October 25, 2026, 9:25 pm
ஜொகூரில் பள்ளிகள் நாளை முதல் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்
October 25, 2026, 9:23 pm
