செய்திகள் மலேசியா
காசே ஹவானா நிதி திட்டத்தின் மூலம் 886 ஊடகவியலாளர்கள் பயனடைந்துள்ளனர்: தியோ நீ சிங்
கோலாலம்பூர்:
கடந்த 2023 ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் உள்ள மொத்தம் 886 ஊடகவியலாளர்கள் காசே ஹவானா நிதி திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
இதன் மொத்த பங்களிப்பு 2,612,790 ரிங்கிட் ஆகும்.
ஊடகவியலாளர்களின் நலனும் பாதுகாப்பும் எப்போதும் அமைச்சகத்தின் அக்கறையாக இருந்து வருகிறது.
எனவே தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்குவதற்காக இந்த நிதி நிறுவப்பட்டது என்று தகவல் தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
இந்த நிதியிலிருந்து உதவி தேவைப்படும் எவரும், தயவுசெய்து எனது அலுவலகத்தையோ அல்லது பெர்னாமாவை தொடர்பு கொள்ளலாம். ஏனெனில் பெர்னாமா இந்த நிதியின் செயலகமாக உள்ளது.
பெர்னாமாவில் உள்ள நாங்களும் அமைச்சும் எங்கள் ஊடக நண்பர்களுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
மெனாரா கோலாலம்பூரில் நடைபெற்ற மின்னல் எஃப்எம் விழாவில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
பெர்னாமா தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூர்-உல் அஃபிடா கமாலுதீன், தலைமை ஆசிரியர் அருள் ராஜூ துரார் ராஜ், அத்துடன் ஒளிபரப்புத் துறை தலைமை இயக்குநர் டத்தோ அஷ்வாட் இஸ்மாயில் ஆகியோரும் உடனிருந்தனர்.
இதற்கிடையில், டெலிகாம் மலேசியாவுடனான கூட்டாண்மைப்பின் மூலம கடந்த ஜூன் மாதம் முதல் இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 116 ஊடகவியலாளர்கள் உதவி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் 361,300 ரிங்கிட் மொத்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தியோ கூறினார்.
காசே ஹவானா திட்டம் என்பது, தேவைப்படும் அதிகமான ஊடகவியலாளர்களுக்கு உதவியை விரிவுபடுத்துவதற்காக டெலிகோம் மலேசியாவின் சமூக கடப்பாட்டு நிதியின் மூலம் செயல்படுத்தப்படும் முன்முயற்சியாகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2026, 12:03 pm
86 கடைகளுடன் ஈப்போ லிட்டில் இந்தியாவில் களை கட்டியது தீபாவளி சந்தை
October 26, 2026, 11:41 am
KLIA குடியிருப்பு கொலை: AKPS அதிகாரியான மனைவியைக் கொன்றதாக நபர் மீது குற்றச்சாட்டு
October 26, 2026, 11:22 am
குற்றச் செயல்களுக்காக வழிபாட்டுத் தலங்களைத் தவறாகப் பயன்படுத்தும் விவகாரத்தில் சமரசமில்லை: பாப்பாராயுடு
October 26, 2026, 10:50 am
பெர்சத்து மீது தேசியக் கூட்டணி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது: தக்கியூடின்
October 26, 2026, 10:28 am
13ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சரவா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டது
October 26, 2026, 6:44 am
புத்ராஜெயாவில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை இழக்கும்: டத்தோ ஸ்ரீ முஹம்மது சனுசி
October 25, 2026, 9:25 pm
ஜொகூரில் பள்ளிகள் நாளை முதல் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்
October 25, 2026, 9:23 pm
