நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்னலின் நம்பிக்கையின் ஒளி ஏற்றுவோம் பெருவிழா கோலாலம்பூர் கோபுரத்தில் ஆயிரம் விளக்குகள் நம்பிக்கையுடன் ஏற்றப்பட்டது

கோலாலம்பூர்:

நம்பிக்கையின் ஒளி ஏற்றுவோம் என்ற கருப்பொருளில், மின்னல் FM ஏற்பாடு செய்த தீபாவளிச் சிறப்பு விழா கோலாலம்பூர் கோபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழா, ஆயிரம் விளக்குகளின் ஒளியையும் கலாசார நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததுடன், அன்பு, மனிதநேயம், நம்பிக்கையை வளர்க்கும் முயற்சியாகவும் அமைந்தது.
தகவல் தொடர்புத் துணையமைச்சர் தியோ நீ சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு, ஒரு மாத காலமாக மின்னல் FM வானொலி வழியாக ஆயிரம் பேரின் கனவுகளையும் தேவைகளையும் கேட்டறிந்ததாக அதன் தலைவர் குமரன் கூறினார்.

அவர்களின் கனவுகள் நனவாக வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் நல்லெண்ண முயற்சியாக, கோலாலம்பூர் கோபுரத்தில் ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டன.

ஒவ்வொரு விளக்கும் ஒரு நபரின் கனவையும், ஒவ்வொரு சுடரும் அந்தக் கனவு நனவாக வேண்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது. 

ஒருவரின் கனவுக்காக மற்றொருவர் நம்பிக்கையைச் சுடர்விடும் இந்த முயற்சி, தீபாவளியின் மகிழ்ச்சியை மனிதநேயத்துடனும் சிந்தனையுடனும் இணைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.

மின்னல் FM ஏற்பாடு செய்த இந்தத் தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சி, கோலாலம்பூர் கோபுரத்தின் ஹெலிபேட் அரங்கில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சி, ஒளி மற்றும் நம்பிக்கையின் செய்தியை மக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது என்று குமரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset