செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை உட்பட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை நிலையம்
சென்னை:
நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (அக்.23) மிக கனமழையும், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அந்தமான் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை (அக்.23) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.
தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.23) கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் அக்.26-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறத்தப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2026, 8:59 pm
புழல் சிறையிலிருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பி ஓட்டம்: சென்னையில் பரபரப்பு
October 20, 2026, 10:53 pm
ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு மீண்டும் திரும்பும் மக்கள்
October 18, 2026, 4:25 pm
சென்னையில் பலத்த மழை: பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்
October 17, 2026, 2:26 pm
பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்
October 16, 2026, 5:28 pm
கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தையும், அறிவியல் மையத்தையும் முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார்
October 16, 2026, 9:25 am
தமிழகத்தில் தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: சுகாதாரத் துறை எச்சரிக்கை
October 15, 2026, 8:43 pm
திமுக தலைவர்கள் குறித்த அவதூறு AI காணொலிப் பதிவுகளை உடனடியாக நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
October 15, 2026, 11:40 am
