நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

புழல் சிறையிலிருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பி ஓட்டம்: சென்னையில் பரபரப்பு

சென்னை: 

சென்னையை அடுத்த புழல் சிறையில் இருந்து இன்றும் ஒரு கைதி தப்பி ஓடியுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நேற்று நேபாளத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் புழல் சிறையில் இருந்து தப்பிய நிலையில் மேலும் ஒரு கைதி இன்று மாயமாகி உள்ளார். 

புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் என்ற தண்டனை கைதி இன்று காலை முதல் மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நேற்று நேபாளத்தை சேர்ந்த விசாரணை கைதி, இன்று தண்டனை கைதி என இருவர் புழல் சிறையில் இருந்து அடுத்தடுத்து மாயமாகி உள்ள நிலையில் சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேபாளத்தைச் சேர்ந்த விசாரணை கைதியின் பெயர் சுதீப் போகத். நேபாளத்தைச் சேர்ந்த இவர், திருட்டு வழக்கு தொடர்பாக ஜே.ஜே. நகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.

இவர் புழல் சிறையில் இருந்து மாயமான அடுத்த நாளே தண்டனை கைதியான சுரேஷ் மாயமாகி இருக்கிறார். 

இருவரும் சிறையில் இருந்து தப்பியுள்ள நிலையில்  போலீஸார் தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset