நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் பலத்த மழை: பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

சென்னை:

சென்னையிலும் புறநகர் பகு​தி​களிலும் கன மழை பெய்துவருகிறது.

நேற்று இரவு முதல் இன்றுவரை  தொடர்ந்து பலத்த இடி, மின்​னலுடன் கனமழை பெய்து வருகிறது.

நேற்று காலை முதல் மாலை வரை கடும் வெயில் வாட்​டிய நிலையில், மாலை 6 மணிக்கு மேல் வடசென்னை பகு​தி​யில் மழை தொடங்​கி, பின்​னர் மாநகர், புறநகர் பகு​தி​களுக்​கும் பரவி இரவு 8 மணிக்கு பிறகு இடி, மின்​னலுடன் கூடிய கனமழை நீடித்தது. சாலைகளில் மழைநீர் தேங்கிய​தால், வாக​னங்​கள் ஊர்ந்து சென்​றன.

இதனால் பிர​தான சாலைகளில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்பட்​டது. 

சென்னை விமான நிலையத்திலும் மழைநீர் வெள்ளம்போல் புரண்டு சென்றது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாயினர்.

கேளம்பாக்கம் பேருந்து நிலையம், வேளச்சேரி போன்ற இடங்களில் மழை நீர் புரண்டு ஓடியது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset