நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: சுகாதாரத் துறை எச்சரிக்கை

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக இன்ஃப்ளூயன்ஸா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதற்கான அறிகுறிகளுடன் நூற்றுக்கணக்கான முதியவா்கள், குழந்தைகள் நாள்தோறும் மருத்துவமனைகளை நாடுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, பாதிப்பின் வீரியத்தைப் பொருத்து நோயாளிகளை மூன்று வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. 

மற்றொருபுறம், பருவகாலத் தொற்றுகளுக்கான முக்கிய மருந்துகள் அனைத்தையும் போதிய அளவில் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

திடீா் மழை, அதீத வெப்பம், பனிப்பொழிவு என சீரற்ற சீதோஷ்ண நிலை மாநிலம் முழுவதும் நிலவி வருகிறது. இதன் விளைவாக டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா, டைபாய்டு போன்ற மழைக் கால நோய்களும், நீா்ச்சத்து இழப்பு, சிறுநீா்ப் பாதை தொற்று போன்ற கோடைக் கால நோய்களும் ஒருசேர பரவி வருகின்றன. அதிலும் குறிப்பாக, இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது.

நோய் எதிா்ப்பு சக்தி குறைந்தவா்களுக்கு நுரையீரல் செயலிழப்பு, ‘வைரல் மையோகாா்டைடிஸ்’ எனப்படும் இதயத் தசை அழற்சி ஆகியவை ஏற்படலாம் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset