செய்திகள் தமிழ் தொடர்புகள்
கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தையும், அறிவியல் மையத்தையும் முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார்
கோவை:
கோவை காந்திபுரத்தில் ரூ.301 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ என்ற நூலகத்தையும், அறிவியல் மையத்தையும் முதல்வர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.
7 தளங்களுடன் கூடிய பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இம் மைய வளாகம் ஏ, பி என இரு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 பேர் அமரக்கூடிய அரங்கம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியை கண்டுகளிக்கும் வகையில் கோளரங்கம், ஃஸ்பேஸ் லிப்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகமும், 2-ஆவது தளத்தில் சொந்தமாக புத்தகம் எடுத்து வருபவர்கள் படிக்க குறிப்பிட்ட இடமும், சிறுவர்களுக்கான நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 3-ஆம் தளத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம், நிர்வாகப் பிரிவு, நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
4-ஆம் தளத்தில் வரலாற்று புத்தகங்கள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, பருவ இதழ்கள், 5-வது தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, ஸ்டாப்-அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டர், 6-வது தளத்தில் ஆங்கிலம் கற்கும் பிரிவு, இன்குபேஷன் சென்டர், 7-வது தளத்தில் அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2026, 9:25 am
தமிழகத்தில் தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: சுகாதாரத் துறை எச்சரிக்கை
October 15, 2026, 8:43 pm
திமுக தலைவர்கள் குறித்த அவதூறு AI காணொலிப் பதிவுகளை உடனடியாக நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
October 15, 2026, 11:40 am
தமிழ்நாடு பாஜக தலைவராகிறாரா சரத்குமார் ? பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்
October 14, 2026, 9:19 pm
“கட்சியினர் அனைவரையும் அரவணைத்தால் மட்டுமே அதிமுக புத்துயிர் பெறும்”: சி.வி.சண்முகம்
October 11, 2026, 7:09 am
முதல்வர் விஜய் ராகுலுக்கு அளித்த மதிய விருந்தும் கிரிக்கெட் வீரர் தோனியின் உணவகத்தில் அருந்திய தேனீரும்
October 9, 2026, 7:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகள் இடைத்தேர்தலில் தவெக வெற்றி
October 9, 2026, 6:34 am
