செய்திகள் தமிழ் தொடர்புகள்
அப்துல் கலாம் பிறந்தநாள்: தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் புகழ் வணக்கம்
சென்னை:
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளனர்.
முதல்வர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்கு ஊக்கமளித்து, அவர்களின் லட்சியப் பயணத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த ஏவுகணை நாயகன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாளில், அவர் நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
இஸ்ரோ விஞ்ஞானி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், குடியரசுத் தலைவர் எனப் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்தபோதிலும், 'ஆசிரியர்' என்ற அடையாளத்தையே தன் வாழ்வின் மகுடமாகக் கருதி, இறுதி மூச்சுவரை மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த அம்மாமனிதரின் எளிமை, நேர்மை, அறிவியல் சிந்தனை என்றும் போற்றுதலுக்குரியவை" எனத் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2026, 8:43 pm
திமுக தலைவர்கள் குறித்த அவதூறு AI காணொலிப் பதிவுகளை உடனடியாக நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
October 15, 2026, 11:40 am
தமிழ்நாடு பாஜக தலைவராகிறாரா சரத்குமார் ? பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்
October 14, 2026, 9:19 pm
“கட்சியினர் அனைவரையும் அரவணைத்தால் மட்டுமே அதிமுக புத்துயிர் பெறும்”: சி.வி.சண்முகம்
October 11, 2026, 7:09 am
முதல்வர் விஜய் ராகுலுக்கு அளித்த மதிய விருந்தும் கிரிக்கெட் வீரர் தோனியின் உணவகத்தில் அருந்திய தேனீரும்
October 9, 2026, 7:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகள் இடைத்தேர்தலில் தவெக வெற்றி
October 9, 2026, 6:34 am
மாணவா்களுடன் கலந்துரையாட ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
