செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு மீண்டும் திரும்பும் மக்கள்
சென்னை:
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற சென்னைவாசிகள் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பரனூர் உள்ளிட்ட சுங்க சாவடிகளிலும் நீண்ட நேரம் வாகனங்கள் காத்து நிற்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு முறையும் பண்டிகை காலங்களில் சென்னையில் பணிபுரியும் மக்கள் தென்தமிழகம் நோக்கி சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை, விஜயதசமி ஆகும்.
நடப்பாண்டில் ஆயுத பூஜை, விஜயதசமி கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடப்பட்டது. திங்கள், செவ்வாயில் விடுமுறை வந்த காரணத்தால் கடந்த வார வியாழக்கிழமை இரவு முதலே பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 11லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
தொடர் விடுமுறை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நேற்று இரவு முதலே சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு படையெடுக்கத் தொடங்கி வருகின்றனர்.
சென்னையைப் பொருத்தமட்டில் 75 சதவீதம் பேர் சென்னை நோக்கி நேற்று இரவு முதலே திரும்ப தொடங்கியுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2026, 4:25 pm
சென்னையில் பலத்த மழை: பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்
October 17, 2026, 2:26 pm
பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்
October 16, 2026, 5:28 pm
கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தையும், அறிவியல் மையத்தையும் முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார்
October 16, 2026, 9:25 am
தமிழகத்தில் தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: சுகாதாரத் துறை எச்சரிக்கை
October 15, 2026, 8:43 pm
திமுக தலைவர்கள் குறித்த அவதூறு AI காணொலிப் பதிவுகளை உடனடியாக நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
October 15, 2026, 11:40 am
தமிழ்நாடு பாஜக தலைவராகிறாரா சரத்குமார் ? பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்
October 14, 2026, 9:19 pm
