நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திமுக தலைவர்கள் குறித்த அவதூறு AI காணொலிப் பதிவுகளை உடனடியாக நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 

சமூக வலைதளங்களில் திமுக தலைவர்களையும் சென்னை மாநகர மேயர் பிரியாவையும் குறித்துப் பகிரப்பட்டுள்ள தவறானதும் அவதூறானதுமான AI காணொலிப் பதிவுகளை உடனடியாக நீக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை கொண்டிதோப்பைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் நடராஜன் என்பவர் இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். 

இவர் தனது மனுவில் சமூக வலைதளங்களில் திமுக தலைவர்கள் குறித்து AI தொழில்நுட்பம் மூலம் போலியாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு அவதூறான காணொலிப் பதிவுகள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகின்றன. 

அதே போல Al-ஆல் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான பதிவுகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையில் பலமுறை புகாரளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார். 

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், திமுக தலைவர்கள் குறித்த தவறான AI பதிவுகள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் திமுக தலைவர்கள் சார்ந்த அவதூறுப் பதிவுகளை நீக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வரும் அக்டோபர் 29 அன்று விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset