செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணி 21 சட்டமன்றத் தொகுதிகளிலும், பாஸ் அதன் நட்புக் கட்சிகள் ஏழு தொகுதிகளிலும் போட்டியிடும்: ஜாஹித்
மலாக்கா:
மலாக்கா மாநிலத் தேர்தலில் பாஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தைகளை இறுதி செய்துள்ளதாக தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி உறுதிப்படுத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம், தேசிய முன்னணி 21 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும், பாஸ் கட்சியும் அதன் நட்புக் கட்சிகளும் ஏழு தொகுதிகளிலும் போட்டியிடும் என்பதை உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.
தேசிய முன்னணி 21 தொகுதிகளிலும், பாஸ் கட்சி ஏழு தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள் என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
அதாவது, எனது ஊடக நண்பர்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் இறுதி வார்த்தைகள் இவைதான் என்று சற்று நேரத்திற்கு முன்பு இங்குள்ள சல்மா கமிஸ் மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் கூறினார்.
முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப் ரவுஃப் யூசோவும் உடனிருந்தார்.
இந்த தேர்தலில் சின்னத்தைப் பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை பாஸ் கட்சியிடமே விட்டுவிட்டார்.
எங்கள் சின்னம் தேசிய முன்னணி சின்னம் தான்; முடிவெடுப்பது அவர்களின் தலைமையின் கையில்தான் உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2026, 11:12 pm
மானியமில்லாத ரோன் 97, ரோன் 95 லிட்டருக்கு 30 சென் குறைந்தது: டீசல் லிட்டருக்கு 10 சென் குறைந்தது
October 21, 2026, 11:09 pm
சரவாக் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதியத்திற்கு இணையான உதவித்தொகை வழங்கும்: அபாங் ஜொஹாரி
October 21, 2026, 4:42 pm
கூச்சிங்கில் உள்ள பள்ளியில் கத்தியால் தாக்குதல் புரிந்த மாணவன்: ஆசிரியர் காயம்
October 21, 2026, 2:29 pm
மித்ரா மரணச் சடங்கு உதவி நிதித் திட்டத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்க வேண்டும்: குணராஜ்
October 21, 2026, 1:10 pm
Waze செயலியை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது
October 21, 2026, 1:09 pm
