செய்திகள் மலேசியா
மானியமில்லாத ரோன் 97, ரோன் 95 லிட்டருக்கு 30 சென் குறைந்தது: டீசல் லிட்டருக்கு 10 சென் குறைந்தது
புத்ராஜெயா:
மானியமில்லாத ரோன் 97, ரோன் 95 ஆகியவற்றின் சில்லறை விலைகள் ஒவ்வொன்றும் லிட்டருக்கு 30 சென் குறைந்துள்ளன.
அதே நேரத்தில் மானியமில்லாத டீசலின் சில்லறை விலை நாளை முதல் அக்டோபர் 28 வரை லிட்டருக்கு 10 சென் குறைந்துள்ளது.
ரோன் 97-இன் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 4.80 ரிங்மிட், ரோன் 95 4.32 ரிங்கிட், டீசல் 5.07 ரிங்கிட் ஆகும்.
பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 408.20 ரிங்கிட்டுக்கு மேல் இருந்தபோதிலும், தானியங்கி விலை நிர்ணய முறை கணக்கீட்டுக் காலத்தில் பிராந்திய சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை மிதமாகக் குறையத் தொடங்கியது என்று நிதியமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து விநியோகம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகளாலும், மற்ற ஆசிய நாடுகளில் இருந்து தொடர்ச்சியான உற்பத்தியின் ஆதரவாலும் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டது என்று அந்த அறிக்கை கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2026, 11:09 pm
சரவாக் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதியத்திற்கு இணையான உதவித்தொகை வழங்கும்: அபாங் ஜொஹாரி
October 21, 2026, 4:42 pm
கூச்சிங்கில் உள்ள பள்ளியில் கத்தியால் தாக்குதல் புரிந்த மாணவன்: ஆசிரியர் காயம்
October 21, 2026, 2:29 pm
மித்ரா மரணச் சடங்கு உதவி நிதித் திட்டத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்க வேண்டும்: குணராஜ்
October 21, 2026, 1:10 pm
Waze செயலியை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது
October 21, 2026, 1:09 pm
