செய்திகள் மலேசியா
மொத்த EPF பணத்தை எடுப்பதற்குப் பதிலாக, விலகல் விருப்பத்துடன் கூடிய தானியங்கி வருடாந்திரத் திட்டம் மலேசியர்களுக்கு பயனளிக்கும்: ராஜன் தேவதாசன்
கோலாலம்பூர்:
2026 சர்வதேச சமூக நல மாநாட்டில், சிங்கப்பூரின் CPF LIFE போன்ற ஒரு காப்பீட்டு வருடாந்திரத் திட்டத்தால் மலேசியா பயனடையலாம் என்று நிதித் திட்டமிடல் நிபுணர் ராஜன் தேவதாசன் பரிந்துரைத்தார்.
ஆனால், அத் திட்டத்தில் விலகல் விருப்பம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், தற்போதைய EPF பணத்தை எடுக்கும் விதிமுறைகளை அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஓய்வூதிய சேமிப்பு, செயலற்ற வருமான ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக, இத்தகைய திட்டங்களை தனியார் ஓய்வூதியத்தை உருவாக்குவதற்கான தனிநபர் பொறுப்பு, நீட்டிக்கப்பட்ட பணி ஆண்டுகள் ஆகியவற்றுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
மூத்த சமூகப் பாதுகாப்பு நிபுணர் மரிகோ ஓச்சி, உலகளாவிய ஓய்வூதிய மாதிரி எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், மாறிவரும் மக்கள்தொகை, பணி முறைகளுக்கு ஏற்ப ஓய்வூதிய அமைப்புகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வதன் முக்கியத்துவத்தையும், நாடு சார்ந்த தீர்வுகளின் தேவையையும் அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 8:48 am
புகை மூட்டம்; மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல: சைட் சாடிக்
October 22, 2026, 8:40 am
குழப்பமடைய வேண்டாம்; நான் பதவியில் நீடிக்கிறேன்: பெர்லிஸ் மந்திரி புசார்
October 21, 2026, 11:12 pm
மானியமில்லாத ரோன் 97, ரோன் 95 லிட்டருக்கு 30 சென் குறைந்தது: டீசல் லிட்டருக்கு 10 சென் குறைந்தது
October 21, 2026, 11:09 pm
