செய்திகள் மலேசியா
வழிவழி வந்த மரபுக்கு வேட்டு வைப்பதா? தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்: எழுத்தாளர் சங்க மேனாள் தலைவர் பெ. இராஜேந்திரன்
டொரொண்டோ:
அரசாங்கத்தை மக்கள்தான் தேர்வு செய்கிறார்கள். மக்களுக்காகத்தான் அரசாங்கமும் அமைச்சர்களும். அந்த மக்களின் தேவையையும் உணர்வுகளையும் அமைச்சர்களும் அதிகாரிகளும் பிரதிபளிக்க வேண்டும் என்பது தான் ஜனநாயகக் கடமையாகும்.
அரசியல் ரீதியாகவும், அரசியலுக்கு அப்பாலும் பெரும்பான்மையான இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அரசியல்-சமூகத் தலைவர்களும் ஒரு விவகாரத்தில் அதிருப்த்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் போது சீர்தூக்கிப் பார்த்து சீர்த்திருத்தம் செய்ய வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால், “திவாளியா தீபாவளியா” எங்கிற விவகாரத்திற்கு பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் உதாசீனப்படுத்துவது தன்மூப்பின் அடையாளமாகக் கருதுகிறோம் என மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவர் பெ. இராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.
கனடா தொரொந்தோவில் நடைபெற்ற செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் எனும் தலைப்பிலான பன்னாட்டு மாநாட்டில், மலேசியாவில் அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளை நடத்துவது குறித்து பெருமைபடப் பேசினேன். திவாளியா தீபாவளியா என்ற விவகாரம் கடல் கடந்து கனடா வரை பேசப்படுகிறது. இங்குள்ள தமிழர்கள் மிகவும் அக்கறையோடு கேட்கிறார்கள். தமிழ் மொழிக்கும் பண்பாட்டுக்கும் இடையூறா? என வினவுகிறார்கள். அந்த அளவிற்கு எங்கள் தலைவர்களும் தமிழர்களும் விட்டுவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறேன்.
எல்லா காலகட்த்திலும் இது போன்ற சிக்கல்களையும் விவகாரங்க்களையும் சமூகம் சந்தித்து வந்துள்ளது. அத்தகையச் சூழலில் தமிழ்ச் சமுதாயம் குரல் எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை.
ம.இ.கா-வின் தலைவர்கள் நேரடியாகப் பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளார்கள். தீபாவளி தினத்தன்றும் பொங்கல் பெருநாளிலும் தொலைக்காட்சியில் தமிழ்த் திரைப்படம் ஒளியேற்ற வேண்டுமென ம.இ.கா தலைவர்கள் கோரிக்கை வைத்து அமைச்சர்களிடம் பேசித் தீர்த்துள்ளதையும் நாம் அறிவோம்.
தீபாவளியா? திவாளியா? எங்கிற விவகாரத்தில் ம.இ.கா-வின் தேசியத் துணைத்தலைவர் மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டுமொத்த உணர்வையும் வெளிப்படுத்தி குரல் எழுப்பியிருந்தார்.
அவரின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை தமிழ்ச் சமுதாயம் ஏற்கின்றது என்பதின் அடையாளமாக தொடர்ந்து குரல் எழுப்ப்பபட்டு வருகின்றது. ஆனாலும், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் தீர்வுக்கு வழி காணாமல் மெத்தனமாக இருப்பது அவர்களின் அலட்சியத்திற்கு மட்டும் அடையாளமாகத் தெரியவில்லை, மாறாக தமிழர்களையும் அவர்களின் உணர்வுகளையும் உதாசீனப்படுத்துவதாகவே கருதுகிறோம்.
இந்த விவகாரத்திற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு நடைமுறையை யாரோ ஒரு தனிமனிதரின் மகிழ்ச்சிக்காகவும் அதிகாரத்துக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. தீபாவளி என்பதுதான் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த சொல்லாடலாகும்.
தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பொது வெளியிலும் அரசு அறிவுப்புகளிலும் தீபாவளி எங்கிற சொல்லாடல் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நியதி, அதுவே பெரும்பாண்மைத் தமிழர்களின் மரபுவழி வந்த எண்ண ஓட்டம். அதனை விட்டுக்கொடுக்க முடியாது என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவர் பெ. இராஜேந்திரன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 21, 2026, 11:12 pm
மானியமில்லாத ரோன் 97, ரோன் 95 லிட்டருக்கு 30 சென் குறைந்தது: டீசல் லிட்டருக்கு 10 சென் குறைந்தது
October 21, 2026, 11:09 pm
சரவாக் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதியத்திற்கு இணையான உதவித்தொகை வழங்கும்: அபாங் ஜொஹாரி
October 21, 2026, 4:42 pm
கூச்சிங்கில் உள்ள பள்ளியில் கத்தியால் தாக்குதல் புரிந்த மாணவன்: ஆசிரியர் காயம்
October 21, 2026, 2:29 pm
மித்ரா மரணச் சடங்கு உதவி நிதித் திட்டத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்க வேண்டும்: குணராஜ்
October 21, 2026, 1:10 pm
Waze செயலியை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது
October 21, 2026, 1:09 pm
