நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதியத்திற்கு இணையான உதவித்தொகை வழங்கும்: அபாங் ஜொஹாரி

கூச்சிங்:

சரவாக் மாநில அரசு தன் ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதியத்திற்கு இணையான உதவித்தொகையும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 700 ரிங்கிட் (RM700) தொகையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

சரவாக் மாநில அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் 2026-ஆம் ஆண்டு நவம்பர் மாத ஊதியத்தின் அடிப்படையில் இரண்டு மாத ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்கப்படும் என்று டான் ஸ்ரீ அபாங் ஜொஹாரி அறிவித்துள்ளார். 

இந்தத் தொகை இந்த ஆண்டின் இறுதிக்குள் வழங்கப்படும்.
சரவாக்கில் பணிபுரிந்த மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு தலா 500 ரிங்கிட் (RM500) வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும், குறிப்பிட்ட சங்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தனியார் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு 700 ரிங்கிட் (RM700) ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset