செய்திகள் தமிழ் தொடர்புகள்
“கட்சியினர் அனைவரையும் அரவணைத்தால் மட்டுமே அதிமுக புத்துயிர் பெறும்”: சி.வி.சண்முகம்
சென்னை:
“அதிமுக தோல்வியடைந்தது கஷ்டமாக உள்ளது. அதிமுக தலைமை மீது மனவருத்தம் உள்ளது. எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு சென்றால் மட்டுமே அதிமுக மீண்டும் புத்துயிர் பெறும்.
மக்களிடம் இன்னும் அதிமுக குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளது” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “அதிமுகவில் கருத்து வேறுபாடு உள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அதிமுக இடைத்தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என அதிமுக தலைமை கூர்ந்து ஆலோசனை செய்து, சீர்திருத்தவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுக்குழுவை கூட்டி கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அதிமுக தொண்டர்களுக்கு தேவை ஒரு நம்பிக்கை, அதனை அவர்களுக்கு கொடுத்தால் அதிமுகவை மீட்டெடுக்கலாம் என்ற ஒரு செய்தி இந்த இடைத்தேர்தல் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையை தொண்டர்களுக்கு கொடுப்பதுதான் இப்போது மிக முக்கியம். அதற்கு அனைவரும் கலந்தாலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
அதிமுகவில் இப்போது நான் எந்தப் பொறுப்பிலும் இல்லை. நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் முடிவெடுத்தால், அதற்கு நாங்கள் துணையிருந்து உழைப்பதற்கும், ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக இருக்கிறோம். தலைமை இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மை. இது வரவேற்கத்தக்க மாற்றம்.
அதிமுக தோல்வியடைந்தது கஷ்டமாக உள்ளது, அதிமுக தலைமை மீது மனவருத்தம் உள்ளது. அதுபற்றி கலந்தாலோசித்து மீண்டும் புத்துயிர்ப்போடு அதிமுகவை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு சென்றால் அதிமுக மீண்டும் புத்துயிர் பெறும். மக்களிடம் இன்னும் அதிமுக குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளது” என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2026, 7:09 am
முதல்வர் விஜய் ராகுலுக்கு அளித்த மதிய விருந்தும் கிரிக்கெட் வீரர் தோனியின் உணவகத்தில் அருந்திய தேனீரும்
October 9, 2026, 7:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகள் இடைத்தேர்தலில் தவெக வெற்றி
October 9, 2026, 6:34 am
மாணவா்களுடன் கலந்துரையாட ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
