செய்திகள் உலகம்
பாகிஸ்தான் பள்ளிக்கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாபூரில் அடர்த்தியான குடியிருப்புப் பகுதியான திர் காலனி உள்ளது. அங்கு பள்ளி ஒன்றின் மேற்கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்தது.
இந்த கோர விபத்தில் 13 வயதுக்கு உட்பட்ட 33 குழந்தைகள், ஒரு பெண் ஆசிரியர் என 34 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 19-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பெற்றோர் தங்களது குழந்தைகளின் நிலையை அறிய பள்ளி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீருடன் குவிந்தனர். பள்ளியின் உரிமையாளரை காவல்துறை கைது செய்துள்ளது.
பல குழந்தைகள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்றும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் அவசர உதவிப் பிரிவு செய்தித் தொடர்பாளர் பிலால் ஃபைசி தெரிவித்தார்.
பள்ளி கட்டிடம் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2026, 12:25 pm
புலியைத் துரத்தி சென்று சாய்த்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்: AI வீடியோ வைரல்
October 15, 2026, 12:19 pm
சிங்கப்பூரில் புகைமூட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ளது
October 14, 2026, 7:39 pm
விமானக் கடத்தல் அச்சம்: மூடப்பட்ட ஜெர்மனி விமான நிலையம்
October 14, 2026, 11:23 am
சவூதி அராம்கோ கட்டிடத்தில் தீ விபத்து: ஹௌதி போராளிகளின் தாக்குதல் என சவூதி அரேபியா குற்றச்சாட்டு
October 13, 2026, 9:23 pm
Qantas விமானத்தில் மூட்டைப்பூச்சி: பயணம் ரத்து
October 13, 2026, 12:51 pm
இறுதி சடங்கின் போது கண் விழித்த 15 வயது சிறுமி: உறவினர்கள் பகீர்
October 13, 2026, 12:32 pm
