செய்திகள் மலேசியா
மலாக்காவில் எச்ஆர்டி கோர்ப் மூலம் மொத்தம் 6,995 பயிற்சி மானிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
அலோர் காஜா:
மலாக்கா மாநிலத்தில் எச்ஆர்டி கோர்ப் மூலம் மொத்தம் 6,995 பயிற்சி மானிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 37.03 மில்லியன் ரிங்கிட் நிதி உதவியுடன் 39,489 பயிற்சிக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.
பயிற்சி வாய்ப்புகள் உத்தேசிக்கப்பட்ட இலக்குக் குழுக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், எச்ஆர்டி கோர்ப் திட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளது
அவ்வகையில் மலாக்காவில் இதுவரை 24,729 பேர் பயிற்சி பெற்றுள்ளதாகவும், 30.14 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 7,734 கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு அமைப்பை முறைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையுடன் மாற்றி நடைமுறைப்படுத்தவும் எளிதில் இயலாது. அதற்கு கணிசமான காலம் பிடிக்கும்.
இந்த மேம்பாடுகளை மேற்கொள்வதில் காட்டிய தீவிர முயற்சிகளுக்காக எச்ஆர்டி கார்ப் குழு முழுவதற்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எச்ஆர்டி கோர்ப் கொள்கையிலிருந்து மக்களுக்கு' எனும் 'பக்கெட் டாக்' பிரசாரப் பயணப் பட்டறைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் எச்ஆர்டி கார்ப் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஷமீர் அஜிஸும் உடன் இருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2026, 11:12 pm
துவாங்கு முஹ்ரிஸ் கண்டனம்; கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: இஸ்மாயில் லசிம்
October 18, 2026, 11:09 pm
மலாக்கா தேர்தல்: வாக்காளர்களின் ஆதரவு நம்பிக்கையளிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 18, 2026, 1:08 pm
மலேசியாவில் “Deepavali” என்ற சொல்லின் பயன்பாட்டை நிலைநிறுத்துவோம்: மலேசிய இந்து சங்கம்
October 18, 2026, 11:31 am
குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கைதான பெண் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
October 18, 2026, 11:20 am
