நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா தேர்தல்: வாக்காளர்களின் ஆதரவு நம்பிக்கையளிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்

அலோர் காஜா:

வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் கெஅடிலான் கட்சிக்கு வாக்காளர்களிடையே சாதகமான ஆதரவு அலை வீசி வருகிறது.

அக்கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் சாதகமான கருத்துகள் கட்சிக்கு வலுவான நம்பிக்கையை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் மேலும் கூறுகையில், வரவிருக்கும் நவம்பர் 14 மாநிலத் தேர்தலுக்காகக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

வெளி மாநிலக் கிளைகளின் ஆதரவோடு உள்நாட்டுக் தலைவர்கள் நேரடியாக வாக்காளர்களைச் சந்தித்து, மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு வருகின்றனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் தாக்கல் செய்த 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதால், இதுவும் தேர்தலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வேட்பாளர்கள் தேர்வு குறித்துப் பேசிய ரமணன், மலாக்கா தேர்தலுக்கான பி.கே.ஆர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்குப் பிறகு அக்டோபர் 24 அன்று குருபோங்கில் உள்ள ஹங் ஜெபாட் அரங்கில் வேட்பாளர்கள் முறைப்படி அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset