நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியாவின் காட்டுத்தீயைக் கையாள உதவ மலேசியா தயாராக உள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

எல்லை தாண்டிய புகைமூட்டத்தை ஏற்படுத்தியுள்ள காடு, நிலத்தீயைக் கையாள இந்தோனேசியாவுக்கு உதவி வழங்க மலேசியா தயாராக உள்ளது. 

மேலும், இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான கூட்டு நடவடிக்கையை வலுப்படுத்த ஆசியான் மட்டத்தில் ஒரு ஒத்துழைப்பு வழிமுறையையும் அது முன்மொழிந்துள்ளது.

பல மாநிலங்கள், வட்டாரங்களில் பள்ளிகள் மூடப்படுவதற்கு காரணமானதோடு, மலேசியர்களின் உடல்நலம் மற்றும் வாழ்க்கையையும் பாதித்துள்ள இந்தத் தீ விபத்துகள் தொடர்பான நிகழ்வுகளைத் தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

முன்பு வழங்கப்பட்டதைப் போலவே, மலேசியா உதவி வழங்கத் தயாராக உள்ளது என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset