செய்திகள் மலேசியா
RON95 பெட்ரோலில் கலப்படமா?; தங்களது வாகன எஞ்சின்கள் சேதப்படுத்தியதாக வாகன ஓட்டிகள் புகார்: தண்ணீர் கலந்த ஏழு பெட்ரோல் நிலையங்கள் மீது சிலாங்கூர் அரசு விசாரணை
கோலாலம்பூர்:
வட மாநிலங்களில் இருந்து வந்த இதே போன்ற புகார்களைத் தொடர்ந்து, ஏழு பெட்ரோல் நிலையங்களில் உள்ள RON95 பெட்ரோலில் நீர் கலந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிலாங்கூரின் உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவு அமைச்சகம் விசாரித்து வருகிறது.
கலப்படம் அடைந்த எரிபொருளால் இயந்திரங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக வரும் செய்திகளுக்கு மத்தியில், பத்து அதிகாரப்பூர்வ புகார்களைத் தொடர்ந்து, ஆய்வகப் பகுப்பாய்விற்காக 27 பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட ஆய்வுகளில் அந்த நிலையங்களுக்கு முறையான உரிமங்கள் இருப்பது கண்டறியப்பட்ட போதிலும், விசாரணைக்கு உதவும் வகையில் ஆவணங்களை வழங்குமாறு நடத்துநர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், வர்த்தக விவரச் சட்டம் 2011-இன் கீழ் ஏற்படக்கூடிய சாத்தியமான மீறல்களையும் அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் புகார் அளிக்கும்போது ரசீதுகள் மற்றும் ஆய்வு அறிக்கைகளை பத்திரமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது.
வேறு யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2026, 11:12 pm
துவாங்கு முஹ்ரிஸ் கண்டனம்; கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: இஸ்மாயில் லசிம்
October 18, 2026, 11:09 pm
மலாக்கா தேர்தல்: வாக்காளர்களின் ஆதரவு நம்பிக்கையளிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 18, 2026, 1:08 pm
மலேசியாவில் “Deepavali” என்ற சொல்லின் பயன்பாட்டை நிலைநிறுத்துவோம்: மலேசிய இந்து சங்கம்
October 18, 2026, 11:31 am
குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கைதான பெண் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
October 18, 2026, 11:20 am
