நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

25 பகுதிகளில் இன்னும் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவாகி உள்ளது

கோலாலம்பூர்:

நாட்டின் சில பகுதிகளில் புகை மூட்டம் தொடர்ந்து சூழ்ந்துள்ள நிலையில், இன்று காலை 25 பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.

காலை 8 மணி நிலவரப்படி, ஜொகூர் மாநிலமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு குறியீட்டில் முதல் 10 இடங்களுக்குள் ஆறு இடங்கள் இந்த மாநிலத்தையே சேர்ந்தவை.

ஆரோக்கியமற்ற காற்றுத் தரத்தின் காரணமாக, ஜொகூரில் உள்ள பள்ளிகள் திங்கட்கிழமை முதல் மேலும் ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று ஆட்சிக் குழு உறுப்பினர் நகீப் கசாலி நேற்று தெரிவித்தார்.

பாசீர் கூடாங்கில் அதிகபட்சமாக 189 என்ற குறியீடு பதிவாகியுள்ளது. 

அதனைத் தொடர்ந்து லார்கின் (181), கோத்தா திங்கி (180), பெங்கெராங் (178), பத்து பகாட் (169), குளுவாங் (163) ஆகிய இடங்கள் உள்ளன. 

மேலும், தங்காக் பகுதியில் 160 என்றும், சிகாமட் பகுதியில் 158 என்றும் காற்று மாசு குறியீடு பதிவாகியுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில், நீலாய் பகுதியில் 173, சிரம்பான் பகுதியில் 170, போர்ட்டிக்சன்பகுதியில் 153 என காற்று மாசு குறியீடு பதிவாகியுள்ளது.

மலாக்காவில் உள்ள புக்கிட் ரம்பாய் பகுதியில் 164, அலோர் காஜா பகுதியில் 161, பண்டாராயா மலாக்கா பகுதியில் 155 எனப் பதிவாகியுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில், ஜோஹான் செத்தியா (163), ஷா ஆலாம் (162), கிள்ளான் (160), பெட்டாலிங் ஜெயா (158) மற்றும் பான்டிங் (157) ஆகிய பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. 

புத்ராஜெயாவில் 159 என்றும், கோலாலம்பூரின் செராஸ் பகுதியில் 157 என்றும் காற்று மாசு குறியீடு பதிவாகியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset