செய்திகள் மலேசியா
ஜொகூரை போன்று மலாக்காவிலும் இந்தியர்களின் பிளவுபடாத ஆதரவு தேசிய முன்னணிக்கு கிடைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை
மலாக்கா:
ஜொகூரை போன்று மலாக்காவிலும் இந்தியர்களின் பிளவுபடாத ஆதரவு தேசிய முன்னணிக்கு கிடைக்கும்.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.
மலாக்கா மாநிலத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலை எதிர்கொள்ள மலாக்கா மாநில மஇகா தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக மஇகாவின் தேர்தல் கேந்திர பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளனர்.
மலாக்கா மாநிலத்தில் நடப்பில் ஆட்சியில் இருப்பதால் கூடுதல் வலுவுடன் தேசிய முன்னணி இந்த தேர்தலை எதிர்கொள்ளும்.
மேலும் ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களைத் தொடர்ந்து நீல அலை மலாக்கா மாநிலத்தில் வீசும்.
இதன் அடிப்படையில் இத்தேர்தலில் தேசிய முன்னணி மிகப் பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
ஜொகூரி மஇகா 100 சதவீத வெற்றியை பெற்றது. ஆனால் நெகிரி செம்பிலானில் அது தோல்வி கண்டது.
ஆனால் மலாக்காவில் மஇகா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது.
அதே வேளையில் மாறி வரும் அரசியலில் நமது மக்கள் எதிர்காலத்தை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2026, 11:12 pm
துவாங்கு முஹ்ரிஸ் கண்டனம்; கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: இஸ்மாயில் லசிம்
October 18, 2026, 11:09 pm
மலாக்கா தேர்தல்: வாக்காளர்களின் ஆதரவு நம்பிக்கையளிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 18, 2026, 1:08 pm
மலேசியாவில் “Deepavali” என்ற சொல்லின் பயன்பாட்டை நிலைநிறுத்துவோம்: மலேசிய இந்து சங்கம்
October 18, 2026, 11:31 am
குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கைதான பெண் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
October 18, 2026, 11:20 am
