செய்திகள் மலேசியா
அடையாள அட்டை கட்டணத்தைத் தவிர்க்க பொய் புகார் செய்த பெண்ணுக்கு RM1000 ரிங்கிட் அபராதம்
சிப்பாங்:
தொலைந்துபோன தனது மைகார்ட் அடையாள அட்டையை
மாற்றுவதற்கான கட்டணத்தைச் செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில், போலி போலீஸ் புகார் அளித்த பெண் ஒருவருக்கு இங்குள்ள உள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றம் RM1,000 அபராதம் விதித்தது.
41 வயதான கரன்ஜீத் கவுர் சிவிந்தர் எனும் அந்தப் பெண், நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மஜிஸ்திரேட் முஸ்தகீம் சுகார்னோ இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
குற்றவாளியின் மேல்முறையீடு மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதங்களைக் கவனத்தில் கொண்டு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி புக்கிட் பாசிர், கம்போங் ஜோரக் இலாஹி பகுதியில் இந்த வழிப்பறிச் சம்பவம் நடந்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி பிற்பகல் 12.37 மணியளவில் சிலாங்கூர், செபாங்கில் உள்ள சைபர்ஜாயா போலீஸ் நிலையத்தில் அவர் இந்த போலிப் புகாரை அளித்தார்.
பொது ஊழியருக்கு தவறானத் தகவலை வழங்கி குற்றமிழைத்ததற்காக, குற்றவியல் சட்டக் தண்டனைச் சட்டத்தின் (சட்டம் 574) பிரிவு 182-இன் கீழ் அவர் மீது முறைப்படி குற்றம் சாட்டப்பட்டது.
இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது RM2,000 வரை அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்பட வழிவகை உள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 5:09 pm
சவூதி அரேபியாவில் மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
October 14, 2026, 4:13 pm
ஆலயங்களை சுத்தம் செய்யும் முஸ்லிம் மாணவர்களின் செயல் ஒரு மதப் பிரச்சினை அல்ல: டத்தோ சிவக்குமார் கண்டனம்
October 14, 2026, 4:09 pm
28 பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்தது; கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூரில் பாதிப்புள்ள பகுதிகள் அதிகரிப்பு
October 14, 2026, 3:54 pm
1எம்.டி.பி வழக்கு விசாரணை: தண்டனையை ஒத்திவைக்கும் நஜிப் ரசாக்கின் விண்ணப்ப மனு தள்ளுபடி
October 14, 2026, 3:33 pm
மலாக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை அக்டோபர் 15 முதல் மீண்டும் இயங்கும்: கல்வி இலாகா அறிவிப்பு
October 14, 2026, 3:18 pm
ரியாத்தில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: முஹம்மத் ஹசான்
October 14, 2026, 3:17 pm
மலாய் ஆட்சியாளர்களின் 273ஆவது மாநாட்டில் மாமன்னர் பங்கேற்றார்
October 14, 2026, 3:16 pm
