நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

DIWALI என்ற வார்த்தையை அகற்றக் கோரி கூட்டரசுப் பிரதேச மஇகாவினர் பிரிக்பீல்ட்ஸில் அமைதி போராட்டம்; DEEPAVALI என்பதே சரியானது: டத்தோ ராஜா சைமன்

கோலாலம்பூர்:

DIWALI என்ற வார்த்தையை அகற்றக் கோரி கூட்டரசுப் பிரதேச மஇகாவினர் பிரிக்பீல்ட்ஸில் அமைதி போராட்டத்தை நடத்தினர்.

கூட்டரசுப் பிரதேச அமைச்சு, கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரிக்பீல்ட்ஸில் தீபாவளி சந்தை நடைபெற்று வருகிறது.

இந்த தீபாவளி சந்தைக்கான அலங்கார பதாகைகளில் DIWALI வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நமது தீபாவளி DIWALI என குறிப்பிடுவது தவறு. DEEPAVALI என்பதே சரியானது என மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதே வேளையில் DIWALI என்ற வார்த்தையை அகற்ற வேண்டும் என அவர் பிரதமருக்கும் கூட்டரசுப் பிரதேச அமைச்சருக்கும் கடிதம் அனுப்பினார்.

இருந்த போதிலும் கூட்டரசுப் பிரதேச அமைச்சும் கோலாலம்பூர் மாநகர் மன்றமும் அதை ஏற்கவில்லை.

ஒரு சில இடத்தில் மாற்றினாலும் ஒரு சில இடங்களில் அப்படியே தான் உள்ளது.

இதன் அடிப்படையில் தான் கூட்டரசுப் பிரதேச மஇகா இன்று அமைதி போராட்டத்தை நடத்துகிறது.

ஐபிஎப், பிபிபி உட்பட பல அரசியல் கட்சிகள், அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை பதாகைகளில் உள்ள DIWALI என்ற வார்த்தையை அகற்ற வேண்டும்.

அதை DEEPAVALI என மாற்ற வேண்டும். நமது நாட்டில் DEEPAVALI தான் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தையாகும்.

முடிந்தால் தமிழில் தீபாவளி வாழ்த்துகள் என போட வேண்டும். இதுவே எங்களின் கோரிக்கையாகும்.

இவ்விவகாரத்தை கூட்டரசுப் பிரதேச அமைச்சருக்கும் கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் தான் இப்போராட்டம் நடைபெற்றது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset