செய்திகள் மலேசியா
சவூதி அரேபியாவில் மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
புத்ராஜாயா:
சவூதி அரேபியாவில் பதற்றமான சூழல் நீடித்து வந்தாலும், ரியாத் மற்றும் ஜெட்டாவில் வசிக்கும் மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள மலேசியத் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகத்திலிருந்து பெறப்பட்ட தினசரி அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹாசன் தெரிவித்துள்ளார்.
பொதுப்பணி அமைச்சு, வெளியுறவு அமைச்சிடம் சூரிய ஒளிக் மின்தகடு திட்டத்தை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் ஊடகங்களிடம் பேசினார்.
சவூதி அரேபியாவில் உள்ள மலேசியத் தொழிலாளர்கள் மற்றும் குடிமக்களுடன் தூதரகம் தொடர் தொடர்பில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அங்குள்ள மலேசியர்கள் அனைவரும் தேவையற்ற முறையில் பொது இடங்களுக்கும் முக்கிய மூலோபாய இடங்களுக்கும் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தூதரகத்துடன் தொடர்பில் இருக்க 'e-Konsular' செயலியைப் பயன்படுத்துமாறும், முடிந்தவரை வீடுகளிலேயே இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2026, 5:36 pm
அடையாள அட்டை கட்டணத்தைத் தவிர்க்க பொய் புகார் செய்த பெண்ணுக்கு RM1000 ரிங்கிட் அபராதம்
October 14, 2026, 4:13 pm
ஆலயங்களை சுத்தம் செய்யும் முஸ்லிம் மாணவர்களின் செயல் ஒரு மதப் பிரச்சினை அல்ல: டத்தோ சிவக்குமார் கண்டனம்
October 14, 2026, 4:09 pm
28 பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்தது; கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூரில் பாதிப்புள்ள பகுதிகள் அதிகரிப்பு
October 14, 2026, 3:54 pm
1எம்.டி.பி வழக்கு விசாரணை: தண்டனையை ஒத்திவைக்கும் நஜிப் ரசாக்கின் விண்ணப்ப மனு தள்ளுபடி
October 14, 2026, 3:33 pm
மலாக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை அக்டோபர் 15 முதல் மீண்டும் இயங்கும்: கல்வி இலாகா அறிவிப்பு
October 14, 2026, 3:18 pm
ரியாத்தில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: முஹம்மத் ஹசான்
October 14, 2026, 3:17 pm
மலாய் ஆட்சியாளர்களின் 273ஆவது மாநாட்டில் மாமன்னர் பங்கேற்றார்
October 14, 2026, 3:16 pm
