நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலையோரம்  நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லாரி மீது கார் மோதி இளைஞர் பலி 

புஞ்சாக் ஆலாம்: 

புஞ்சாக் ஆலம், ஆலம் அவானா தொழிற்சாலை பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லாரியின் பின்புறம் PERODUA MYVI ரக கார் மோதிய விபத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சாலை விபத்து குறித்து காலை 8.14 மணிக்கு தங்கள் தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார்  கூறினார். 

தகவல் கிடைத்தவுடன் அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து ஏழு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டனர்

தலையில் பலத்த காயமடைந்த ஓட்டுநரை வெளியேற்ற தீயணைப்புப் படையினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தினர்.

மீட்கப்பட்டப் பின்னர் அவர் உடனடியாக சுகாதார அமைச்சின்  மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இருப்பினும், காரை ஓட்டிச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.

அவர் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாகவே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகள் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்தான தீவிர விசாரணைக்காகத் காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொறுப்புள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள போக்குவரத்துச் சூழல் மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset