நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்களுக்கான தமிழ்மொழி பாடத் திறன் மேம்பாட்டு பட்டறை; 8,690 மாணவர்கள் பயன் பெறுவார்கள்: டத்தோஸ்ரீ ரமணன்

பெட்டாலிங்ஜெயா:

மித்ராவின் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்களுக்கான தமிழ்மொழி பாடத் திறன் மேம்பாட்டு பட்டறையின் வாயிலாக 8,690 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

மனிதவள அமைச்சரும் மித்ரா தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மித்ரா இத்திட்டத்திற்காக 901,680 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதும்

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மொத்தம் 8,690 எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள் பயனடைந்தனர்.

கல்வியமைச்சுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட இந்த முயற்சி கல்விசார் சாதனைகளை வலுப்படுத்துதல், தமிழ் மொழித் திறனை மேம்படுத்துதல், இந்திய மாணவர்கள் தகுந்த கல்வி பெறுவதை உறுதி செய்யும் மடானி அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும்.


மேலும், மாணவர்களின் ஊக்கம், தன்னம்பிக்கை, தேர்வுகளை அதிகத் தயார்நிலையுடன் எதிர்கொள்ளும் திறனை அதிகரிப்பதன் மூலம் தேர்வுக்கு அவர்களை தயார் செய்வதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்திய சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு, குறிப்பாக மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் சிறந்து விளங்க உதவுவதில், முழுமையான கவனம் செலுத்துவதில் மடானி அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தத் திட்டத்தின் செயலாக்கம் நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.

இன்று சிலாங்கூரைச் சேர்ந்த சுமார் 300 எஸ்பிஎம் மாணவர்கள்  இந்த பட்டறையில் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து  நாடு முழுவதும் 7,897 எஸ்பிஎம் மாணவர்களுக்கும் 793 பேர் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாணவரும் அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்.

மித்ரா மூலம், நாங்கள் கல்வி உதவியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் சாதனைகளில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கல்விசார் தலையீடுகளையும் செயல்படுத்துகிறோம்.

தமிழ் என்பது தேர்வுகளுக்காகக் கற்றுத் தேற வேண்டிய ஒரு பாடம் மட்டுமல்ல, அது வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய மொழி, கலாச்சாரம், அடையாளத்தின் ஒரு புதையலாகும் என்று அவர் கூறினார்.

இன்றைய நிகழ்ச்சியில் கல்வி துணையமைச்சர் வோங் கா வோ, மித்ரா இயக்குநர் ரவிந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset