நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

DUKE நெடுஞ்சாலையின் கால்வாய் துளைகளிலிருந்து வீசிய துர்நாற்றத்துடன் கூடிய அடர் புகை 

கோலாலம்பூர்: 

DUKE நெடுஞ்சாலையில் செந்தூல் சுங்கச்சாவடியைக் கடந்து கோலாலம்பூர் நோக்கிய பாதையில், சாக்கடை இரும்பு வலைகளிலிருந்து துர்நாற்றத்துடன் அடர் புகை வெளியேறியது இன்று காலை வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவம் குறித்து Threads பயனர் @snapaholicphotography பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

செந்தூல் சுங்கச்சாவடியைக் கடந்த பிறகு கோலாலம்பூருக்குச் செல்லும் பாதையில் உள்ள சாக்கடைகளிலிருந்து புகை வெளியேறுவதை தாம் கண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், செந்தூல் சுங்கச்சாவடியைக் கடந்த பாதையில் இந்த அசாதாரணமான சூழல் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், கமாலியானா முகமட் என்ற பயனர், அப்பகுதியைக் கடந்து செல்லும்போது மூன்று சாக்கடை இரும்பு வலைகளிலிருந்து புகை வெளியேறுவதைக் கவனித்ததாகக் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் இதனைச் சாதாரணமான ஒரு நிகழ்வு என்று நினைத்ததாகவும், பின்னரே அதன் தீவிரத்தைப் புரிந்து கொண்டதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்

இந்தச் சமூக ஊடகப் பகிர்வுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளன.

சாலைக்கு அடியில் உள்ள பொருட்கள் ஏதேனும் தீப்பற்றி எரிகிறதா என்ற சந்தேகத்தையும் இது மக்களிடையே கிளப்பியுள்ளது.

இச்சம்பவத்திற்கான உண்மையான பின்னணி மற்றும் காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

நிலைமை தீவிரமடைவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset