நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் லிம்போங்கான் KTMB ரயில் தண்டவாளப் பாதையில் காரை செலுத்திய நபர்: KTMB விசாரணை 

கிள்ளான்: 

இங்குள்ள ஜாலான் லிம்போங்கான் KTMB ரயில் நிலைய பகுதியில் ஆடவர் ஒருவர் ரயிலின் தண்டவாளப் பாதையில் காரைச் செலுத்திச் சென்ற சம்பவம் குறித்து மலாயா ரயில்வே நிறுவனமான KTMB நிறுவனம் விசாரணையைத் தொடங்கியுள்ளது 

கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கிள்ளான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் லிம் ஜிட் ஹுய் இது குறித்துப் பேசுகையில், இச்சம்பவம் அன்று இரவு 11.40 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து தனது வீட்டிற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்த 60 வயதுடைய உள்ளூர் மூத்த குடிமகன் ஒருவரே காரை ஓட்டி வந்துள்ளார் என அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கவனக்குறைவாக ரயில் தண்டவாளப் பாதைக்குள் காரைச் செலுத்தி, சுமார் 130 மீட்டர் தூரம் வரை தொடர்ந்து பயணித்துள்ளார்.

அதன் பின்னர், நள்ளிரவு 1.40 மணியளவில் மலாயா ரயில்வே நிறுவனத்தின் ஊழியர்கள் காரை ரயில் பாதையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக மலாயா ரயில்வே நிறுவனம் 1991ஆம் ஆண்டின் ரயில்வே சட்டத்தின் பிரிவு 62இன் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

முன்னதாக, ஒரு ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி (SUV) ரகக் கார் தண்டவாளத்தில் நிற்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரவலாகப் பகிரப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset